நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் துர்கா மூர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உடனடியாக மனுக்கள் மீது தீர்வு காண உத்தரவிட்டார்.