நாமக்கல்: குடிநீர் தட்டுப்பாடு பொதுமக்கள் கடும் அவதி

50பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், "அரசு அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களாக எங்களுக்கு வெகு நாட்களாகக் குடிநீர் இல்லாமல் தடுமாறி வருகிறோம். மேலும் ஒரு குடம் தண்ணீரை மூன்று ரூபாய்க்கு விலைக் கொடுத்து வாங்கி வருகிறோம். உடனடியாக தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்" என மனு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி