நாமக்கல் நகரப் பகுதியில் தாயுமானவர் சீற்றத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ரேஷன் கடை ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்குத் தேவையான ரேஷன் பொருட்களை அவர்களது வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கினர். இது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.