நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய் துறை அதிகாரிகள் எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் விஏஓ அலுவலகங்களில் பணிகள் நடைபெறாமல் தேங்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.