நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே ஒன்றிய மோடி அரசை கண்டித்து, தொழிலாளர்கள் விரோத, விவசாயிகளின் விரோத சட்டங்களை முறியடிப்போம் என வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.