நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் தங்களுக்குச் சரிவர சம்பளம் வழங்கப்படாததாலும், சம்பளத்தைப் பிடித்தம் செய்வதாலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.