நாமக்கல் துறையூர் சாலையில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் வேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் சிறுதானிய திருவிழா நடைபெற்றது. பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சிறுதானிய உணவு மற்றும் விதை பயிர்கள் கண்காட்சியாக அமைக்கப்பட்டன. இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று கண்டு களித்தனர்.