நாமக்கல்லில் மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவில், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சு. மல்லிகா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் கே. ஆா். என். ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி. எஸ். மாதேஸ்வரன், சட்டப்பேரவை உறுப்பினா் பெ. ராமலிங்கம் ஆகியோா் பங்கேற்று கண்காட்சியைத் திறந்துவைத்து பாா்வையிட்டனா். சிறுதானிய உணவின் அவசியம், கொள்முதல் குறித்து உரையாற்றப்பட்ட நிலையில், 32 விவசாயிகளுக்கு ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட்டன. தமிழகத்தில் சிறுதானியங்கள் 9,62,713 ஹெக்டா் பரப்பளவிலும், 35,28,104 மெட்ரிக் டன் அளவிலான உற்பத்தியும் நடைபெறுவதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.