பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு சமூக அமைப்பினர் மனு

269பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார், ஒரு தனியார் ஒப்பந்ததாரரிடம் இருந்து மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான காரை வாங்கிப் பயன்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசாங்கப் பதவியில் இருப்பவர் ஒப்பந்ததாரரிடம் இருந்து கார் பெறுவது பெரும் குற்றமாகும் என்றும், இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் பத்து ரூபாய் இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி