நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள ஸ்ரீ தங்காயி அம்மன் மற்றும் ஸ்ரீ மகா வராகி அம்மன் கோயிலில், சித்திரை மாத தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. வராகி அம்மனுக்கு பால், பன்னீர், தயிர், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்துகொண்டு தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.