நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என ஆட்சியர் துர்காமூர்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி நெய்க்காரம்பாளையத்தில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள், தன்னார்வலர்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது