நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் ச. உமா அங்கு பணிகளை முடித்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததைக் கண்டு அந்த வாகனத்தை நிறுத்திப் பிடித்தார். உடனடியாக நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அலுவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனர். தலைக்கவசமின்றியோ, இருசக்கர வாகனத்தில் மூன்று, நான்கு பேரோ பயணம் செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.