கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் கரும்பு சாகுபடி விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவிப்பு வெளியிட்ட திமுக அரசை கண்டித்து இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.
