தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கொள்கை விளக்கு பொதுக்கூட்டம் இன்று மௌனப் பகுதியில் நடைபெற்றது. இதில் பெண்கள், ஆண்கள் என பொதுமக்களுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். மூணு கடை வீதியில் உள்ள கோவில் செல்லும் சாலை ஒருவழிப் பாதையாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை உடனே சரி செய்ய வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.