நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரண்டாவது நாளாக காலி மது பாட்டில்களை வாங்க மறுப்பு, பணி பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.