நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் 1,708 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 1,475 பேர் பங்கேற்றனர். 233 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. இன்று (நவ. 16) நடைபெறும் தாள் 2 தேர்வில் 9,656 பேர் பங்கேற்கின்றனர். காலை 9:30 மணிக்கு மேல் தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.