கரூர் மாவட்டம் மோகனூர் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சந்தோஷ் குமார் மற்றும் மலர்கொடி தம்பதியினரின் இளைய மகள் ஹன்சிகா, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, தரைமட்ட நீர் தேக்கத் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.