காரினை பெண் சரியாக இயக்காததால் டி. ஆர். ஓ அதிர்ச்சி.

1பார்த்தது
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழகத்தில் முதன்முறையாக ஒரு இலட்சம் மானியத்துடன் கூடிய கார் மற்றும் ஆட்டோக்கள் பெண் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மானியத்தில் வழங்கப்பட்ட காரில் ஏறி அமர்ந்து, பயனாளி ஓட்டுநர் கோகிலாவை ஆட்சியர் அலுவலக போர்டிகோ வரை இயக்கச் சொன்னார். காரினை இயக்கிய கோகிலா தடுமாறியதால், கார் முன்பாக உள்ள தடுப்பில் மோதி நின்றது. இதனால் வருவாய் கோட்டாச்சியர் சரவணன் நேரடியாக ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். பின்னர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலர் இந்தியா, கோகிலாவை அழைத்து பதட்டமின்றி வாகனம் ஓட்ட அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி