நாமக்கல் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

54பார்த்தது
நாமக்கல் பகுதியில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வந்தனர். இன்று காலை முதலே நாமக்கல் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் குளிர்பான கடைகள் மற்றும் இளநீர் கம்பங்கூழ் ஆகிய இடங்களில் படையெடுத்து வருகின்றனர். மேலும் இந்த வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் காரணத்தால் சாலையோரங்களில் கடைகள் வைத்திருப்போர் அவதிப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி