நாமக்கல் தில்லைபுரம் பகுதியில் இன்று மாலை சந்திர கிரகணம் நடைபெற்றபோது, தாம்பாள தட்டில் உலக்கை தன்னந்தனியாக நின்ற அதிசயத்தை ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர். சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் நடைபெறும் நேரங்களில் மட்டுமே உலக்கை இவ்வாறு நிற்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.