நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக முட்டை விலை மாற்றமின்றி 5.40 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோழி பண்ணையாளர்கள் பங்கேற்றனர். மற்ற மண்டலங்களில் விலை உயராததால், இங்கும் விலை உயர்த்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்ணையாளர்கள் முட்டை விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.