தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 86 மையங்களில் 19,020 மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். இதில் 1,813 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 131 பேருக்கு சொல்வதை எழுதுபவர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வைக் கண்காணிக்க முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 3 முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறும்.