நாமக்கல் சேலம் சாலையில் உள்ள டிஎன்சி திரையரங்கில் இன்று டெலிவரி பாய் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் வில்லனாக நடித்துள்ளார். டிரைலர் வெளியீட்டு விழாவில் கேக் வெட்டி கொண்டாடிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.