நாமக்கல் மையப்பகுதியில் அமைந்துள்ள பல பட்டறை மாரியம்மன் கோவிலில் இன்று மஞ்சள் நீராட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் தூக்க தேரில் பொதுமக்கள் உதவியுடன் அம்மன் வீதி உலா வந்தார். மஞ்சள், சிகப்பு சந்தனம் பூசிக்கொண்டு ஏராளமான ஆண்கள் தேரை கோட்டை சாலை வழியாக சந்தைப்பேட்டை வரை எடுத்துச் சென்றனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.