நாமக்கல் அருகே எண் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த லட்சுமி, குடும்பத்துடன் பலபட்டறை மாரியம்மன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். சேலம் சாலையில் உள்ள ஹோட்டலில் உணவருந்திவிட்டு வெளியே வந்தபோது, ஹெல்மெட் அணிந்த மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து லட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.