நாமக்கல்: கிராம நிர்வாக அலுவலர்கள் திடீர் காத்திருப்பு போராட்டம்

790பார்த்தது
நாமக்கல் மாவட்ட எலச்சிபாளையம் காவல் நிலைய எல்லையில், பாலமேடு கிராம நிர்வாக அலுவலரை தாக்கிய சீனிவாசன் மீது குண்டாஸ் சட்டம் பதிய வேண்டும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.