நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டதால், பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சிக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.