நாமக்கல் நகரப் பகுதியான நல்லிபாளையம் உழவர் சந்தை பேருந்து நிலையம் சேலம் சாலை ஆகிய பகுதிகளில் நான்கு சக்கர வாகனத்தில் தர்பூசணி பழம் விலை மிகவும் குறைவாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ தர்பூசணி பழம் ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தர்பூசணி விளைச்சல் அதிகம் வந்ததால் விலையை மிகவும் குறைவாக விற்பனை செய்கின்றனர்.