நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் உள்ள எஸ்பி அலுவலகத்தை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் இன்று திடீரென ஆய்வு செய்தார். அங்குள்ள கோப்புகளை ஆய்வு செய்த ஐஜி, நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.