எலச்சிபாளையம்: அன்பழகன் (55) என்பவர் தனது மனைவி சாரதா (51) காணவில்லை என எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கணவர் அடிக்கடி குடிபோதையில் வந்து தகராறு செய்வதாகவும் கூறப்படுகிறது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு அன்பழகன் அளித்த புகாரை அடுத்து போலீசார் சாரதாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.