நாமக்கல் உலகப் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் ஆகும். இங்கு வருகின்ற 30 ஆம் தேதி அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று மாலை ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 20க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் மூலம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வடை மாலை செய்வதற்காக பணிகள் இன்று மாலை பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ராஜா பட்டாச்சார், ராமன் பட்டாச்சாரியார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.