நல்லிபாளையம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ரமேஷ் மற்றும் சுதாகர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞர் சங்க செயலாளர் செந்தில் கலந்துகொண்டு, வருகின்ற 10ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இளைஞர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.