நாமக்கல் கோட்டை சாலையில் உள்ள மனவளக்கலை மன்றத்தில், நாமக்கல் அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இலவச யோகா பயிற்சி இன்று காலை நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் சூரிய ஆசனம், பத்ராசனம் போன்ற பல்வேறு ஆசனங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டு, செய்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.