நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர், கடந்த 17 ஆம் தேதி துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, 25 வயதுடைய வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்டு ஏறி, பின்னர் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமிருந்த 9,500 ரூபாய் ரொக்கம், செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவற்றைப் பறித்துச் சென்றார். மேலும், பிரேம்குமார் வங்கி கணக்கிலிருந்த 40,000 ரூபாயையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பணம் பறித்துச் சென்ற யோகேஸ்வரன் என்பவரை நேற்று இரவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.