மோகனுார் அருகே, கோழிப்பண்ணையில் வேலை செய்து வந்த சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி, கடந்த 9 ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் மோகனுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே பண்ணையில் வேலை செய்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த திலீப்குமார் (25) என்பவர், சிறுமியை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் திலீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.