நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் குறைதீர் கூட்டம் நடைபெறும். இன்று நடைபெற்ற குறைதீர்க்கூட்டத்திற்கு நாமக்கிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர் வந்திருந்தார். எழுச்சிப்பாளையம் பகுதியில் உள்ள கோவிலில் திமுக சார்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர் கோவில் திருவிழா நடக்க அனுமதி தராத காரணத்தால், இது குறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்து, இன்று தீக்குளிக்க முயற்சித்தார்.