நாமக்கல்லைச் சேர்ந்த ஹரிணி (20) என்பவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்த அவர், தோழிகள் வெளியே சென்றிருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீஸார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சதீஷ் என்பவர் ஹரிணியிடம் வாங்கிய தங்கச் சங்கிலியைத் திரும்பக் கொடுக்காததே தற்கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.