நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி திமுக சார்பில் ஒன்றிய அரசை வலியுறுத்தி அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மாநில அமைப்பாளர் இளங்கோ, திமுக நகர பொறுப்பாளர்கள் நடேசன், கார்த்திகேயன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.