திருச்செங்கோடு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்

142பார்த்தது
திருச்செங்கோடு பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், நகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. மேலும், சூரியம்பாளையம் பகுதியில் பொதுக் கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நகர மன்ற உறுப்பினர் ரவிக்குமார், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி