ஜேடா்பாளையம்: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்

625பார்த்தது
ஜேடா்பாளையம்: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்
பரமத்தி வேலூர் அருகே உள்ள அரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வந்த சுந்தர்ராஜ் (58) என்பவர், கடந்த 10-ஆம் தேதி அப்பள்ளியில் படிக்கும் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பரமத்தி வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி