மல்லசமுத்திரம்: காய்ந்த சருகில் தீப்பிற்றி விபத்து

0பார்த்தது
மல்லசமுத்திரம்: காய்ந்த சருகில் தீப்பிற்றி விபத்து
மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, தனிநபருக்கு சொந்தமான காலி நிலத்தில், நேற்று (பிப்ரவரி 12) மர்ம நபர்கள் புகைபிடித்துவிட்டு வீசிய சிகரெட்டால் காய்ந்த இலைசருகில் தீப்பற்றி எரிந்தது. ஆட்டையாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்மணி மற்றும் சிறப்புநிலை அலுவலர் தண்டபாணி ஆகியோர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் பஞ்சாயத்து அலுவலகம், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கடைகள் மற்றும் குடியிருப்புகள் இருந்தும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

தொடர்புடைய செய்தி