நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை அடுத்த அரியாம்பாளையம் இருகலூர் பகுதியைச் சேர்ந்த 34 வயது கூலித்தொழிலாளி மாதேஸ்வரன், மதுப்பழக்கத்தால் கடந்த 12-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். குடும்பத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மல்லசமுத்திரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.