திருச்செங்கோடு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் அருண்ராஜ் நகராட்சி அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அருண்ராஜ், நகராட்சி அதிகாரியைச் சாக்கடை அருகே அழைத்துச் சென்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அதிகாரிகளை மிரட்டுவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், "அதிகாரம் என்பது பொறுப்பு தானே தவிர அது பதவி இல்லை" என அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.