மரவாபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (19) மற்றும் அவரது நண்பர் கார்த்திக் ராஜா (20) ஆகியோர் திங்கள்கிழமை இரவு கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்பும்போது, பரமத்தி காவல் நிலையம் எதிரே உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் மோதி இருவரும் படுகாயமடைந்தனர். வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரமத்தி போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.