பரமத்தி வேலூா்: இளைஞர் விபத்தில் பலி

829பார்த்தது
பரமத்தி வேலூா்: இளைஞர் விபத்தில் பலி
பரமத்தி வேலூா் அருகே கோரை அறுக்கச் சென்ற கோகுல் (19) என்ற இளைஞர், நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். சனிக்கிழமை நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த கோகுலை மீட்ட பொதுமக்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி