திருச்செங்கோடு வட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே நாய்க்கடிபுதூரைச் சேர்ந்த நல்லதம்பி (70) என்பவர், ஏளுர் சோலார் நிறுவனத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். பணியை முடித்துவிட்டு செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, அக்கலாம்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி பலத்த காயமடைந்தார். நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.