தனியார் கல்லூரி மாணவன் தற்கொலை

0பார்த்தது
நாமக்கல் பரமத்தி அருகே உள்ள பிஜேபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் கஞ்சா வைத்திருப்பதாக எழுந்த தகவலின் பேரில், ஆய்வு செய்ய ஆசிரியர்கள் சென்றனர். ஒரு அறையில் கஞ்சா கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, யோகேஷ் என்ற மாணவரை தலைமை ஆசிரியர் விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அந்த மாணவர், கல்லூரியின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி