வேல கவுண்டம்பட்டி அருகே அக்கலாம்பட்டி பகுதியில் நடைபெற்ற பெரியாண்டவர் கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சியின் போது காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அடிதடி ஆனது. இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது. காவல்துறையினர் பொதுமக்களை சிறைபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.