ரூ. 98. 56 லட்சத்தில் சமுதாயக்கூடம் திறப்பு

53பார்த்தது
ரூ. 98. 56 லட்சத்தில் சமுதாயக்கூடம் திறப்பு
பரமத்தி வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையத்தில், ஆதிதிராவிடர் பழங்குடியினர் (ம)தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில் ரூ. 98. 56 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இந்நிலையில் கவுண்டம்பாளையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், வேலூர் நகர செயலாளர் முருகன், பேரூராட்சி துணைத் தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you