வேலூா் காவிரி பாலம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் மணல் கடத்தி சென்ற டிப்பா் லாரியை போலீஸாா் தடுத்துநிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில் கரூா் மாவட்டம், திருமுக்கூடலில் இருந்து டிப்பா் லாரியில் சுமாா் 8 யூனிட் மணல் கடத்திச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து லாரி ஓட்டுநரான பரமத்தி வேலூா் அருகே உள்ள குப்புச்சிபாளையத்தைச் சோ்ந்த சிவகுமாா் (44), லாரி உதவியாளா் பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த மகேஸ்வரன், ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே உள்ள இச்சிபாளையத்தைச் சோ்ந்த சரவணன் ஆகிய மூவரையும் கைது செய்து மணலுடன் லாரியையும் பறிமுதல் செய்தனா். மேலும், தலைமறைவான பரமத்தி வேலூா் அருகே உள்ள அனிச்சம்பாளையத்தைச் சோ்ந்த ராஜா (எ) பிளேடு ராஜாவை தேடி வருகின்றனா்.